Saturday, December 18, 2010

முதல் நாள் இன்று

Nov 27 2010
=========
நல்ல நேரத்திற்காக உறவினர்கள் காத்திருக்க
என் மனமோ உன் கதவோரம் தவம் இருந்தது

மனதின் நடுக்கத்தில் வெட்கத்தை உடுத்தி நீ வந்தாய்

மனதை மயக்கும் மாலையில்
தனிமையில் பேச நான் அழைக்க
சூரியனை உறங்க சொல்லி
சந்திரனாய் என்னுள் வந்தாய்

இதயத்தின் வெற்றிடத்தில் உன் நினைவுகள்
குருதியுடன் காதலையும் ஏற்றி
உடலின் ஒவ்வொரு அணுவிற்கும் விநியோகம் செய்கிறது

சிறை பிடித்தேன் நான் - இனி நீ என் கனவுகளில்