Friday, April 1, 2011

கனவலை - A dream web














எப்பொழுதும் போல இப்பொழுதும் உன் கனவலையில்..
கனவலையின் கனவுலகில் நாமிருவரும் கனமழையில்
கனமழையின் பெரும்இடியில் உன் முகமோ என்மடியில்
என்மடியில் உன்விழி என்வழி நோக்கிட
பெய்யும் மழையை நினையாமல் நனைகிறோம் நாம்..

Friday, March 25, 2011

உனக்காக...

உறங்காத பொழுதில் நினைவில் வந்தாய்
உறங்கும் பொழுதில் கனவில் வந்தாய்..

உள்ளங்கள் கலந்து காத்திருக்கும் காதலுடன்
கவிதைகளும் கனவுகளும் காத்திருக்கின்றன உனக்காக..

Tuesday, March 15, 2011

கனவு

பனித்துளியாய் என்னுள் வந்து
சப்தமின்றி என் கனவுகளில் உன் நினைவை நிரப்பி விட்டு
தடயமில்லாமல் இருதயத்தில் கரைந்து விட்டாய்.
உள்ளமெல்லாம் உன் நினைவிருக்க உன்னை
உன்னை தேடி திரியும் என் கனவுக்கு என்ன பதில் சொல்ல..

Thursday, February 24, 2011

உறக்கம் தொலைத்த நினைவு

உறக்கம் தொலைத்த கண்களில் உன் பிம்பங்கள்...
உள்ளங்கை நான் பார்க்க
துடிக்கும் உன் புருவமாய் என் கை ரேகைகள்...
பல் தேய்க்க வாய் திறக்க
உன் விரல் நகங்களாய் என் பற்கள்......
இப்படியே தொடங்கிவிட்டது மீண்டும் ஒரு நாள்...

நினைவெல்லாம் நீ

உன்னில் எனக்கு பிடித்தது என்ன?
எண்ண எண்ண சொல்லுவேன்
சொல்லில் மட்டும் சொல்ல மாட்டேன்
என் கண்ணில் கூட சொல்லுவேன்.

சொல்லும் போது மட்டும் அல்ல
உயிர் செல்லும் போதும் எண்ணுவேன்
இந்த ஜென்மம் மட்டும் அல்ல
எந்த ஜென்மமும் வேண்டுவேன்

வேண்டி நின்றது ஒன்றும் அல்ல
உன் பார்வை ஒன்றை தேடினேன்.

நானும் இப்படி இருந்தது இல்லை
என் மனமோ இப்படி துடித்தது இல்லை

இதை எல்லாம் சொன்ன நான் பைத்தியம் இல்லை
நீ மட்டுமே இதன் மருந்தாவதால் 
என் பைத்தியம் எப்பவும் தெளிவது இல்லை.

Wednesday, February 23, 2011

கடற்கரை

பௌர்ணமி முன்தினத்தில்
கைபிடித்து நாம் நடக்க
கடற்கரையில் கால் நனைக்க
நம் கதைகள் நாம் பேச
முதல் காதலை நாம் உணர
முழு நிலவும் என் மடியில்
சொர்க்கம் என் காலடியில்

Tuesday, February 22, 2011

புரிதல்

உன் வெட்கமும் நடுக்கமும் உன் புகழ் சொல்ல
சுடாமல் சுட்ட உன் விழிகள் ஆயிரம் கவிதை பேச
கண்களாலும் சிறு புன்னகயாலும் நான் பதிலுரைக்க
பல ஜென்ம புரிதலை உணர்ந்து கொண்டோம்...
"பொண்ணு ரொம்ப அமைதி" என்று சொல்பவர்க்கு
நான் என்ன விளக்கம் சொல்ல?

கடற்கரையில் காத்திருந்தபோது..

காத்திருப்பது உனக்காகவெனில் காத்திருக்கும் நேரம் தெரிவதில்லை 
உடனிருப்பது நீயெனில் காலம் சென்ற தூரம் புரியவில்லை